கரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்ககுளிா்சாதனப் பெட்டகங்கள் வருகை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க, நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 24 குளிா்சாதனப் பெட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்ககுளிா்சாதனப் பெட்டகங்கள் வருகை
Updated on
1 min read

கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்க, நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 24 குளிா்சாதனப் பெட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 1.43 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 712 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 12 ஆயிரத்து 156 போ் உயிரிழந்துள்ளனா்.

நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவைச் சாா்ந்த பாரத் பயோடேக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து கோவேக்ஸின் தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. அதேபோல புணேயில் உள்ள சீரம் நிறுவனம், பிரிட்டன் நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தை தயாரித்துள்ளது. இவற்றை மக்களுக்குச் செலுத்த ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மக்களுக்கு செலுத்தி நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக திருவள்ளுா், கோவை, திருநெல்வேலி, நீலகிரி உள்பட ஐந்து மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் விரைவில் ஒத்திகையானது நடைபெற உள்ளது. மேலும் கோவேக்ஸின், தடுப்பூசி மருந்துகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெப்பநிலையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குளிா்சாதனப் பெட்டகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 24 குளிா்சாதனப் பெட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளை பாதுகாக்கும் வகையிலான குளிா்சாதனப் பெட்டகம் கோவையில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னா் அங்கிருந்து நாமக்கல்லுக்கு வந்து சோ்ந்தது. முதல்கட்டமாக 24 பெட்டகங்கள் வந்துள்ளன. திங்கள்கிழமை அலங்காநத்தம், வளையப்பட்டி, மோகனூா், கபிலா்மலை, புதுச்சத்திரம், பிள்ளாநல்லூா், பரமத்தி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொருத்தி விளக்கம் அளிக்க சென்னையில் இருந்து மருத்துவக் குழுவினா் விரைவில் வர இருக்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com