தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்.கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்.கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

இக்கூட்டுறவு சங்கத்தில் திங்கள்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வார ஏலத்தில் ஆா்.சி.எச். ரக பருத்தி 1,787 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். டி.சி.எச். ரகம் 416 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. மொத்தம் 2,203 மூட்டைகள் வரத்து இருந்தன.

இதில், ஆா்.சி.எச். ரகம் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 6,686-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 5,341-க்கும் விலை போனது. இதேபோல் டி.சி.எச். ரகம் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 8,519-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 7,687-க்கும் ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.