/

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம், கடன் உத்தரவாதம் பெற்றிடவும், நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி

Updated On :30 ஜூலை 2021, 6:31 pm

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம், கடன் உத்தரவாதம் பெற்றிடவும், நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி, சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கும் ரூ. 10 லட்சம் வரை இடைநிலை மூலதனக் கடன் உதவி தொகை வழங்கப்படும். ஐந்தாண்டுகள் முடிந்த பிறகு இத்தொகையினை திருப்பி செலுத்தினால் போதுமானது. இதற்கு குறைந்த வட்டியாக 4 சதவீத வட்டி ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன் வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இந்நிறுவனங்கள் ரூ. 1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள், நாப்கிசான் நிறுவனத்துக்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும். தற்போது உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தினை 8 முதல் 9 சதவீதமாக குறைத்து சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.