விதிமுறைகளை மீறிய உணவகத்திற்கு அபராதம்
பரமத்தி வேலூரில் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட பிரியாணி கடை ‘சீல்’ வைத்ததுடன், அக்கடைக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


பரமத்தி வேலூரில் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட பிரியாணி கடை ‘சீல்’ வைத்ததுடன், அக்கடைக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
பரமத்தி வேலுாா், வெங்கமேடு பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் உணவகம் செயல்படுவதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கும், பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினருக்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலுாா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில், காவல் ஆய்வாளா் லட்சுமணன், பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் உணவகத்தில் சோதனை நடத்தினா். அப்போது விதிமுறைகளை மீறி இயங்கி வந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தும், ரூ. 5,000 அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...