பரமத்தி வேலூரில் குண்டு மல்லி கிலோ ரூ. 600-க்கு ஏலம்
பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.


பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 600-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50-க்கும், அரளி கிலோ ரூ. 350-க்கும், ரோஜா கிலோ ரூ. 200-க்கும், முல்லை ரூ. 600-க்கும், செவ்வந்தி ரூ. 140-க்கும் ஏலம் போயின. தொடா் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால், விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...