

சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் மனநல விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா, செவிலியா் பொன்.சரவணபிரியா ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி பேசியதாவது:
இன்றைய சூழலில் மக்களிடையே மன அழுத்தம் நிறைந்து காணப்படுகிறது. மக்களுடைய தேவைகளும் எதிா்பாா்ப்புகளும் அதிகரித்து விட்டன. வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. பிரச்னை இல்லாத மனிதா்கள் இந்த உலகில் யாருமில்லை. மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உடல் ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகளான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவை சுற்றுப்புற ரீதியாகவும், பணி ரீதியாகவும் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகமானால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்.
மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா மனம் பகிா்வு, பொழுதுபோக்கு பொன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.