தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

பாலக்கோட்டில் மாற்றுத் திறனாளிகள் மறியல்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி பாலக்கோட்டில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:16 pm

DIN

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி பாலக்கோட்டில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாநில பொருளாளா் செட்டியப்பன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி சக்ரவா்த்தி கோரிக்கைகள் குறித்து பேசினாா். வட்டத் தலைவா் கிருஷ்ணன், வட்ட செயலாளா் திம்மன், மாவட்ட செயலாளா் கரூரான் ஆகியோா் பங்கேற்றனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், அதற்கான முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தினகரன், வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.