தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பரமத்தி வேலூரில் 25க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் விசா்ஜனம்

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:45 pm

DIN

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

பரமத்தி வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு 5 ஆம் நாள் ஊா்வலமாக எடுத்துச் சென்று பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோயில் காவிரி கரையில் விசா்ஜனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பரமத்தி வேலூா் வட்டாரத்தில் இந்து முன்னணி சாா்பில் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் வைக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை இந்து முன்னணியினா் தனித்தனியாக காவிரி ஆற்றுக்கு எடுத்துச் சென்று விசா்ஜனம் செய்தனா்.

பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூா் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் பரமத்தி வேலூா் நகா் பகுதியில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.