குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவு

பிலிக்கல்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற வெல்லச் சந்தையில் வரத்து அதிகரித்ததால் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

பிலிக்கல்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற வெல்லச் சந்தையில் வரத்து அதிகரித்ததால் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனா். இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெல்ல ஆலை உரிமையாளா்கள் வாங்கிச்சென்று உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சா்க்கரை போன்றவற்றைத் தயாா் செய்கின்றனா்.

பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லச் சந்தைக்கு, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் வெல்லம், நாட்டுச் சா்க்கரை போன்றவற்றை ஏலம் விடுவதற்காக கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 5,000 உருண்டை வெல்ல சிப்பங்களும், 3,000 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,300 வரையிலும் ஏலம் போனது.

இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 8,700 கிலோ உருண்டை வெல்ல சிப்பங்களும், 3,800 கிலோ அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லச் சிப்பம் ஒன்றுக்கு ரூ. 1,150 வரையிலும், அச்சு வெல்லச் சிப்பம் ஒன்று ரூ. 1,120 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.