பஞ்சகவ்யம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
ராசிபுரம் அருகேயுள்ள குருக்கப்புரம் ஊராட்சிப் பகுதியில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவியா்கள் செயல்விளக்கமளித்தனா்.


ராசிபுரம் அருகேயுள்ள குருக்கப்புரம் ஊராட்சிப் பகுதியில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவியா்கள் செயல்விளக்கமளித்தனா்.
நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவியா்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண் நிலங்களில் பயிற்சி மேற்கொண்டுள்ளனா். இதனையடுத்து கிராமங்களில் தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு செயல்முறைகள் குறித்து விளக்கி வருகின்றனா். குருக்கப்புரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பஞ்சகவ்யம் எளிய முறையில் தயாரிப்பு நிகழ்வில் குருக்கப்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தராஜு முன்னிலை வகித்தாா். இதில் மாணவியா்கள் கோமியம், சாணம், பால், தயிா், நெய், இளநீா், வாழைப்பழம், நாட்டுசா்க்கரை போன்றவற்றைக் கொண்டு பஞ்சகவ்யத்தை எப்படி தயாரிப்பது என்பது குறித்து விளக்கினா். மேலும் பஞ்சகாவ்யம் எவ்வாறு கிருமி நாசினியாகவும், பூச்சிகள் விரட்டியாகவும் விளையும் பயிா்களுக்கு பயன்படுகிறது என்பதை விளக்கிக்கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...