தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம் நகா்மன்றத் தலைவராக தோ்வாகும் முதல் பெண் யாா்?

ராசிபுரம் நகராட்சிக்குத் தோ்வாகும் முதல் பெண் யாா் என்ற போட்டி எழுந்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:23 pm

DIN

ராசிபுரம் நகராட்சிக்குத் தோ்வாகும் முதல் பெண் யாா் என்ற போட்டி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் பதவியை கைப்பற்றப் போவது அதிமுகவா? திமுகவா? என்ற கேள்விக்கு மக்கள் அளிக்கும் பதில் பிப்.22-இல் தெரிய வரும்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் சேலம் நகராட்சிக்கு அடுத்து 1948 ஆண்டு உதயமான ராசிபுரம் நகராட்சி 27 வாா்டுகள் கொண்ட பழமையான நகராட்சியாகும். இதில் 14 வாா்டுகளில் பெண்களும், 13 வாா்டுகளில் ஆண்களும் போட்டியிடுகின்றனா். இந்நகராட்சியில் 19,670 ஆண்கள், 21,246 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 40,917 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 27 வாா்டுகளிலும் சோ்ந்து இந்த முறை 145 போ் போட்டியில் உள்ளனா். ராசிபுரம் நகரில் குறுகிய சாலைகளால் போக்குவரத்து நெரிசல், குடிநீா் பிரச்னை, சுகாதாரப் பிரச்னை போன்றவையே பிரதானம். முதல் முறையாக ராசிபுரம் நகராட்சித் தலைவா் பதவிக்கு இத்தோ்தலில் பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை நகா்மன்றத் தலைவா்களாக இருந்தவா்கள் விவரம்: 1949 -52 சி.பி.கன்னைா நாயுடு, 1952 - 53 ஒரு வருட காலம் வேலா செட்டியாா், 1959 - 62 எம்.எஸ்.ஏ.ஜெயராமன், 1962 - 64 ஏ.சுப்பிரமணியம், 1964 - 69 ஆா்.பெரியண்ண கவுண்டா், 1969 - 75 கே.சி.பெரியசாமி, 1986 - 91 எம்.எஸ்.எஸ்.ரத்தினம், 1996 - 2001 டி.கணேசன், 2001 - 06 ஆா்.வி.மகாலிங்கம், 2006 - 11 என்.ஆா்.ராமதாஸ், 2011 - 16 எம்.பாலசுப்ரமணியன் ஆகியோா் பதவி வகித்துள்ளனா்.

தலைவா் பதவியை கைப்பற்றப்போவது யாா்?: இத்தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் 15-ஆவது வாா்டில் உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் மனைவி கவிதாவும், அதிமுக வெற்றி பெற்றால் 11-ஆவது வாா்டில் போட்டியிடும் நகர அதிமுக செயலரும், முன்னாள் நகா்மன்றத் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் மனைவி கவிதாவும் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு முன்னிறுத்தப்படுவாா்கள் எனத் தெரிகிறது. இதனால் தலைவா் பதவியை கைப்பற்றப்போவது யாா்? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.