தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

நாமக்கல்லில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:50 pm

நாமக்கல்லில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனா். நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அதன் உரிமையாளா்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை துப்புரவு ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், பாஸ்கா், பழனிசாமி, சையத்காதா் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.

அதில் பல்வேறு கடைகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பது தெரியவந்தது. அவா்களுக்கு தலா ரூ. 500 அபராதமாக மொத்தம் ரூ. 4 ஆயிரத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.