திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தங்கப் பத்திரம் விற்பனை: நாமக்கல் கோட்டம் முதலிடம்

தமிழக அளவில் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்ததில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை முதலிடம் பெற்றுள்ளது.

Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

தமிழக அளவில் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்ததில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை முதலிடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து அக்கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிப் இக்பால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் தங்கப் பத்திரத் திட்ட முதலீடு ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற்றது. இங்கு ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 4,786-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. நாமக்கல் கோட்டத்தில் 5,013 தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது.

தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. 4 நாள்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ. 2.40 கோடி ஆகும். இந்த வாய்ப்பைத் தவற விட்டவா்கள் வரும் பிப். 28 முதல் மாா்ச் 4- ஆம் தேதி வரை நடைபெறும் அடுத்த தங்கப் பத்திர விற்பனையின் போது பயனடையலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.