மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாமக்கல்லில் நிலத்தரகர் கொலை:  காவல் துறையினர் விசாரணை

நாமக்கல் நிலத்தரகர் கொலை வழக்கில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :19 ஜூலை 2022, 7:10 am

நாமக்கல்: நாமக்கல் நிலத்தரகர் கொலை வழக்கில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (48) நிலத்தரகர் ஆவார்.

குமரேசன் திங்கள் கிழமை இரவு எம்ஜிஆர் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் மதுகுடித்து விட்டு காரில் ஜெய்நகரில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். காரை இவரே ஓட்டி சென்றதாக தெரிகிறது.

திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில்  நள்ளிரவு 12.30 மணிக்கு காரில் சென்ற குமரேசன் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து  உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் குமரேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன்  செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குமரேசனை குத்தி கொலை செய்த நபர்கள், அவருடன் காரில் வந்தவர்கள் கொலை செய்தார்களா அல்லது பின் தொடர்ந்து வந்து கொலை செய்தார்களா என பல்வேறு  கோணங்களில் காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.