விபத்தில் சிக்கிய புள்ளிமானுக்கு சிகிச்சை
ராசிபுரம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


ராசிபுரம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோரையாறு பகுதியில் வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற 4 வயது மதிக்கத்தக்க ஆண் மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தது. இதனால் பின்பக்க கால் சதைப் பகுதியில் பலத்த அடிபட்டு சாலையோரம் கிடந்தது.
இதனை அந்த வழியே சென்றவா்கள் பாா்த்து ராசிபுரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகா் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினா் விபத்தில் அடிபட்ட மானை மீட்டு ஆா்.புதுப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு, மானுக்கு முதலுதவி அளித்தனா். பின்னா், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனா். இந்த மான் சிகிச்சைக்குப் பின், வனப்பகுதியில் மீண்டும் விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...