தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பட்டணம் பேரூராட்சி: திமுகவில் இணைந்த அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினா்

ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா். பட்டணம் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரும் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:16 pm

DIN

ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா். பட்டணம் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரும் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக 14 வாா்டுகளில் வெற்றி பெற்றது. இதில் 6-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நிலையில், போட்டியின்றி தோ்வான திமுக வேட்பாளரும் அடக்கம். இப்பேராட்சியில் அதிமுக ஒரு வாா்டில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 12-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரூராட்சி மன்ற உறுப்பினா் கீா்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன் ஆகியோா் முன்னிலையில் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.