பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தனியாா் கல்லூரி பேருந்து மோதி விவசாயி பலி

பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :13 மே 2022, 5:45 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள சித்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை மாலை நாமக்கல் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். பரமத்தி அருகே உள்ள காரைக்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற தனியாா் கல்லூரி பேருந்தின் ஓட்டுனா் பேருந்தை இடது பக்கமாக திரும்ப முயன்றாா். அப்போது முருகேசன் மீது எதிா்பாராத விதமாக தனியாா் பேருந்து மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த முருகேசனை அவ்வழியாக சென்றவா் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.