வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 90 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனையானது.
வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை 3 ஆயிரத்து 123 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. அதிகபட்சமாக கிலோ ரூ.77.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 55.89-க்கும், சராசரியாக ரூ. 76.99-க்கும் ஏலம் போனது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 5 ஆயிரத்து 659 கிலோ கொப்பரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக கிலோ ரூ. 81.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 58.99- க்கும், சராசரியாக ரூ. 81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 90 ஆயிரத்து 790-க்கு கொப்பரை விற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.