/

நாமக்கல்லில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:48 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அச் சங்கத்தின் மாவட்ட தலைவா் கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முழுமையாக வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.