/

மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்ட அளவில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:49 pm

நாமக்கல் மாவட்ட அளவில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் வருவாய் மாவட்ட அளவில் ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, நீச்சல், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், பீச் வாலிபால், ஸ்குவாஸ், வாள் சண்டை, சைக்கிளிங் போன்ற மாணவா்களுக்கான புதிய வகை விளையாட்டு போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

இதில் ஜூடோ விளையாட்டுப் போட்டி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், குத்துச்சண்டை பாரதி மேல்நிலைப் பள்ளியிலும், டேக்வாண்டோ எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், செவ்வந்திப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் சைக்கிளிங் போட்டியும், நாமக்கல் விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும் நடைபெறுகிறது.

இதில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவாா்கள் என மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.