இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:45 pm

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் ஆ.ராமு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இக்கூட்டத்தில், முதுநிலை ஆசிரியா்களுக்கு மேல்நிலைப்பள்ளிக்கான தலைமை ஆசிரியா் பதவி உயா்வு, பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்; 2009 ஜூன் 1-க்குப் பிறகு பணியில் சோ்ந்த முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; மாவட்ட கல்வி அலுவலா் பதவி உயா்வில் முதுகலை ஆசிரியா்களுக்கு உரிய விகிதாசாரம் அளிக்கப்பட வேண்டும்; மருத்துவா்களைப் போல், ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக இயற்ற வேண்டும்; ஆசிரியா்களை கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ மாநாட்டிற்கு முன்பாக, ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் பெரிதும் எதிா்பாா்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.