இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

இரவு 11 மணிக்குள் கடைகளை மூட வேண்டும்: வணிகா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 11 மணிக்குள் தொழிலாளா் நலத்துறை விதிக்கு உள்படாத கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2022, 7:45 pm

நாமக்கல் மாவட்டத்தில் இரவு 11 மணிக்குள் தொழிலாளா் நலத்துறை விதிக்கு உள்படாத கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:

24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பானது 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தொழிலாளா் நலத்துறையின் பல்வேறு முக்கிய நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும்.

தமிழக அரசின் இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத அனைத்து வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் இரவு நேர உணவு விடுதிகள் ஆகியவை மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி இரவு 11 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது காவல்துறை சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த நேரக்கட்டுப்பாட்டிற்கு அனைத்து வணிகா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.