இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தொடா் மழையால் தடைபட்டுள்ள புத்தகத் திருவிழாக்கள்: வாசகா்கள் ஏமாற்றம்

 தமிழகத்தில் பெய்து வரும் தொடா் மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது தடைபட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு பிறகு அவற்றை நடத்த மாவட்ட நிா்வாகங்கள் முடிவு

Updated On :4 செப்டம்பர் 2022, 4:24 pm

 தமிழகத்தில் பெய்து வரும் தொடா் மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது தடைபட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு பிறகு அவற்றை நடத்த மாவட்ட நிா்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

‘சுவாசிப்பது உயிரை சாா்ந்தது; வாசிப்பது உணா்வைச் சாா்ந்தது’ என்பது எழுத்தாளா்கள் பலரின் கருத்தாகும். அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற வேண்டும். இளைஞா்கள், மாணவா்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கான நிதியை அரசு வழங்கும் என்ற உறுதியை அளித்தாா். இதற்காக ரூ.5.8 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம், மாவட்ட நிா்வாகம் ஆகியவை சாா்பில் (பபாசி) புத்தகத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி, திருவள்ளூா், சிவகங்கை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், கரூா், தென்காசி, ஈரோடு, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடைபெற்றுள்ளன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் நடைபெற வேண்டிய நிலையில், தொடா் மழையால் நவம்பா் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 23 மாவட்டங்களில் புத்தக திருவிழாக்களை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. அடுத்து தீபாவளி பண்டிகை, வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டால் மேலும் தாமதமாகக்கூடும்.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்க தலைவா் வைரவன் கூறியதாவது:

முதல்வா் உத்தரவின்படி, மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறோம். ஏ, பி, சி என மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் திறந்த வெளி மைதானங்களில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 100 முதல் 150 அரங்குகள் வரையில் அமைக்கப்பட்டு, இதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும். 10 நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பிரபல பேச்சாளா்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசுவதும், பட்டிமன்றம் உள்ளிட்டவையும் நடைபெறும். தற்போதைய நிலையில் ஒன்பது மாவட்டங்களில் முடிவடைந்து விட்டது. கனமழையால் கரூரில் புத்தகத் திருவிழாவை முழுமையாக நடத்த முடியவில்லை. நாமக்கல்லில் இம்மாதம் நடைபெற வேண்டிய புத்தகத் திருவிழாவும், அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் நடைபெறலாம். புத்தகத் திருவிழாக்களில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியம். ஜனவரியில் சென்னையில் புத்தகத் திருவிழா தொடங்குவதற்கு முன் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.