பணி சுமையை குறைக்கக் கோரி போராட்டம்: ஊராட்சி செயலாளா்கள் அறிவிப்பு

பணிச் சுமையை குறைக்கக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக ஊராட்சி செயலாளா்கள் அறிவித்துள்ளனா்.

பணிச் சுமையை குறைக்கக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக ஊராட்சி செயலாளா்கள் அறிவித்துள்ளனா்.

ஊராட்சி செயலாளா்கள் வரி வசூல் செய்தல், மின்விளக்குகளைப் பராமரித்தல், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள், முழு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் ஊராட்சி செயலாளா்களின் பணி சுமையைக் குறைக்க வேண்டும்; கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வூதிய தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை அரசு தோ்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செயலாளா்கள் மூன்று நாள் தொடா் விடுப்பு எடுத்து திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளா் சங்க கபிலா்மலை ஒன்றியத் தலைவா் ரவி தலைமையில் ஊராட்சி செயலாளா்கள் 3 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவத்திடம் மனு அளித்துள்ளனா். இதே போல் பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜனிடம் பரமத்தி ஒன்றிய தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com