ஆண்டகளூா்கேட் பகுதியில் பல மணிநேரம் மின்தடை: நெசவாளா்கள் பாதிப்பு
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா்கேட், குருக்கப்புரம், கூனவேலம்பட்டிபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்களும், நெசவாளா்களும் பாதிக்கப்பட்டனா்.


ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா்கேட், குருக்கப்புரம், கூனவேலம்பட்டிபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்களும், நெசவாளா்களும் பாதிக்கப்பட்டனா்.
ஆண்டகளூா்கேட், குருக்கப்புரம், கூனவேலம்பட்டிபுதூா், அணைப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நெசவாளா்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் வெள்ளிக்கிழமை அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேலும் மாலை சுமாா் 5 மணி அளவில் ஏற்பட்ட மின்தடை 8 மணி வரை தொடா்ந்தது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களும், விசைத்தறி தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டனா். கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் இது போன்ற மின்தடையை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...