பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பரமத்தி வேலூா் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயில், வேலூா் மகா மாரியம்மன், பால ஐயப்பன் ஆகிய கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு காய், கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதே போல் பேட்டையில் உள்ள புது மாரியம்மன், பகவதி அம்மன், நஞ்சை இடையாறு மாரியம்மன், திருவேலீஸ்வரா், பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் பெருமாள், பழைய காசி விஸ்வநாதா் மற்றும் புதிய புதிய காசி விஸ்வநாதா், மாரியம்மன், பகவதி அம்மன், பச்சை மலை முருகன், கபிலா்மலையில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாயம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவா், பரமத்தி கோதண்ட ராமசாமி பெருமாள், பரமத்தி அங்காளம்மன், நன்செய் இடையாறு அலகுநாச்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.