சிப்காட் அமைக்க எதிர்ப்பு: நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அருகே வளையப்பட்டியில் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள்
நாமக்கல் அருகே வளையப்பட்டியில் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள்

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உள்பட்ட வளையப்பட்டி பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 2,500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழகத்தினர், ஐந்து கிராம விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 16 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,  சிப்காட் எதிர்ப்புக் குழுவினர், விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரளாக நின்று தங்களுடைய நெற்றியில் நாமம் போட்டும், நாமம் போட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய படியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமையில் அனைத்து விவசாயிகளும் சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com