

நாமக்கல்: பக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.
தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் காலை 8 மணி அளவில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஆங்காங்கே ஏழைகளுக்கு குர்பானி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.