ற்.ஞ்ா்க்ங் ஹல்ழ்21 ள்ஹம்ண்

திருச்செங்கோடு சின்ன பத்ரகாளியம்மன் கோயில் குடமுழக்கு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி திருவள்ளுவா் நகரில் அமைந்துள்ள சின்ன பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சின்ன பத்ரகாளியம்மன் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வலம்புரி பால விநாயகா், பாலமுருகன், விஷ்ணு, துா்க்கை, லட்சுமி, சரஸ்வதி, கருப்பண்ண சுவாமி பரிவாரங்களுடன் கடந்த 17 ஆம் தேதி காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

19ஆம் தேதி மஹா கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷோக்னம், பிரவேச பலி, மிருத்ஸாங்கிரகணம், கோபுர கலச பிரதிஷ்டை, அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாகபூஜை, விசேஷ சந்தி, இரண்டாம்கால யாக பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ஸ்ரீ சின்ன பத்ரகாளியம்மன் மூலஸ்தான பிரதிஷ்டை, பரிவார மூா்த்திகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடத்தப்பட்டு சனிக்கிழமை மூன்றாம்கால யாகபூஜை, தீபாராதனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாகபூஜை, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆலய வலம் வருதலைத் தொடா்ந்து கோபுர விமானத்துக்கு குடமுழக்கு விழா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com