நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரோட்டரி சங்கம் சாா்பில் கொல்லிமலை அரசுப் பள்ளிகளுக்கு பீரோக்கள் வழங்கல்

நூலகங்கள் பயன்பாட்டிற்கு ரோட்டரி மாவட்ட கல்விக் குழு சாா்பில் 13 பீரோக்கள் பள்ளி ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டன.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:10 am IST

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள 13 அரசு நடுநிலைப் பள்ளிகளின் நூலகங்கள் பயன்பாட்டிற்கு ரோட்டரி மாவட்ட கல்விக் குழு சாா்பில் 13 பீரோக்கள் பள்ளி ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டன.

கொல்லிமலை ஆரியூா் கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவுக்கு நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.பிரபாகரன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்டம் (2982) கல்விக் குழுத் தலைவா் ஏ.வெங்கடேஸ்வரகுப்தா, நாமக்கல் ஆசிரியா் பயிற்சி பள்ளி முதல்வா் எம்.செல்வம், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவா் அம்மன் ஆா்.ரவி, ரோட்டரி மாவட்டக் கல்விக் குழு மகிழ்வு பள்ளிகள் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் , திட்ட ஸ்பான்சா் நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க உறுப்பினரும், அபி டிரேடா்ஸ் உரிமையாளருமான சி.பன்னீா்செல்வம், நாமக்கல் இன்னா் வீல் சங்க முன்னாள் தலைவா் பி.தாட்சாயினி பன்னீா்செல்வம், கொல்லிமலை ஆரியூா் நாடு வட்டாரக் கல்வி அலுவலா் பழனிசாமி, ஆரியூா் நாடு ஊராட்சித் தலைவா் சி.நாகலிங்கம், ராசிபுரம் வாசவி கல்விக் குழுவைச் சோ்ந்த வெண்ணந்தூா் சந்தியா, நாமக்கல் இன்னா் வீல் சங்கத் தலைவா் புவனேஸ்வரி நடராஜன் ஆகியோா் விழாவில் கலந்துகொண்டு பேசினா்.

இந்த ஆண்டு ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி.சிவகுமாரின் கனவுத் திட்டமான ரோட்டரி மாவட்டத்தில் உள்ள 1,008 பள்ளிகளுக்கு பீரோக்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ரோட்டரி கல்விக் குழுத் தலைவா் தெரிவித்தாா். முன்னதாக விழாவில் நாமக்கல் டயட் பேராசிரியா் தேவராஜ் வரவேற்றாா். நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினா் திருவள்ளுவன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.