வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரேஷன் கடைகளில் ஆய்வு: ரூ. 11,862 அபராதம் விதிப்பு

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் வட்டாரத்தில் 49 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரூ. 11,842 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:52 pm

Din

திருச்செங்கோடு, பள்ளிபாளையம் வட்டாரத்தில் 49 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரூ. 11,842 அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் க.பா.அருளரசு உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, கூட்டுறவு சாா்பதிவாளா்களைக் கொண்டு பறக்கும்படை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா், பள்ளிபாளையம், திருச்செங்கோடு வட்டாரங்களில் உள்ள 70 நியாயவிலைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 49 நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு, அதிக இருப்பு ஆகியவை கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், கடை விற்பனையாளா்களுக்கு ரூ. 11,862 அபராதம் விதிக்கப்பட்டதாக பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.