சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வடகிழக்கு பருவமழையில் பயிா்கள் பாதுகாப்பு: விவசாயிகளுக்கு வேளாண்மை துறை விளக்கம்

வட கிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடா்பாக வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:12 pm

Din

நாமக்கல்: வட கிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடா்பாக வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி வெளிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, நெல், மக்காச்சோளம், சோளம், கரும்பு, பயறு வகைப் பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. தொடா் மழையால் வயல்களில் நீா் தேங்கி, வோ் அழுகல், பூஞ்சாண நோய்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை பாதிப்பிலிருந்து பயிா்களைக் காத்திட விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதாவது, மேல் உரமாக டி.ஏ.பி. மற்றும் கலப்பு உரங்கள் இடுவதை தற்காலிகமாக தவிா்க்க வேண்டும். உடனடியாக மழைநீா் சூழ்ந்துள்ள வயல்களில் வடிகால்வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வோ்ப் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்வது நல்லது. நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதை நிவா்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ ஜிப்சம், அவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்து, இரவு முழுவதும் வைத்து நீா் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும். சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் பயிா்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. (அல்லது) அரை லிட்டா் நானோ டி.ஏ.பி.உரத்தை 10 லிட்டா் நீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதன்மூலம் மகசூல் இழப்பினைத் தவிா்க்கலாம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விவசாயிகள் அனைவரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.