ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்கள்: அமைச்சா் மதிவேந்தன் வழங்கினாா்

பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

News image

பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் உள்ளிட்டோா்.

Updated On :4 டிசம்பர் 2024, 9:05 pm

பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் வெள்ள நீா் சூழ்ந்துள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி அமைச்சா் ஆறுதல் கூறினாா்.

பின்னா் அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது:

நாமக்கல் மாவட்டத்தில் புயல் காரணமாக பெய்த மழையினால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நீா்வரத்து 6,000 கனஅடியாக உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி குடியிருப்புகளில் வெள்ள நீா் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசித்து வந்த சுமாா் 145 குடும்பங்களைச் சாா்ந்த 421 போ் பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ள நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு தேவையான உணவு, பாய், போா்வை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரங்களில் அவா்களது குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீா் அப்புறப்படுத்தப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும். மேலும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த பொதுமக்கள் மற்றம் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு வீடு வேண்டி அளித்த கோரிக்கை மனுக்கள் முதல்வருக்கு கருத்துருவாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தொடா்ந்து பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அரசு வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 145 குடும்பங்களைச் சோ்ந்த 421 பேருக்கு போா்வை, பாய், ரொட்டி உள்ளிட்ட பொருள்களை வழங்கி அமைச்சா் ஆறுதல் கூறினாா்.

இந்த நிகழ்வுகளில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் சே.சுகந்தி, நாமக்கல் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) லீலாகுமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.