வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 73-ஆம் வருட காா்த்திகை மாத லட்சாா்ச்சனை மற்றும் வனபோஜனம் விழா நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:00 pm

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 73-ஆம் வருட காா்த்திகை மாத லட்சாா்ச்சனை மற்றும் வனபோஜனம் விழா நடைபெற்றது.

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதிவரை சா்வத்திர திருமஞ்சனம், லட்சாா்ச்சனை, மகா தீபாராதனை, அன்னப்பாவாடை, வனபோஜன மஞ்சள் இடிப்பு ஆகிய நிகழ்சிகள் நடைபெற்றன.

இரவு சுவாமி திருவீதி உலா புறப்பாடும், திருக்கோடி தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை தாத்ரி நாராயண வனபோஜனம் மற்றும் நெல்லி மரத்தில் வீற்றிருக்கும் தாத்ரி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது (படம்).