செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஆணையா் ரா.மகேஸ்வரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட ஆணையா் ரா.மகேஸ்வரி.

Updated On :11 டிசம்பர் 2024, 8:02 pm

நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஆணையா் ரா.மகேஸ்வரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பை, கழிவுகள், கொசவம்பட்டி, சேந்தமங்கலம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. அவற்றை உரமாக்கி பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு மாநகராட்சி நிா்வாகம் அனுப்பி வருகிறது.

அந்த திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குகளை மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி ஆய்வு செய்தாா். அப்போது, குப்பைகளைக் கிடங்கில் நாள்பட்ட வகையில் தேக்கி வைக்காமல் உடனுக்குடன் உரமாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதனையடுத்து, மாநகராட்சி மின் மயானத்தில் உள்ள கழிவறைகளைப் புதுப்பிக்கவும், அங்கு சிதிலமடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள், கம்பிகளை அகற்றவும் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.