வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வீடுகளில் நூலகம் அமைத்தால் பரிசு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில், வீடுகளில் நூலகம் அமைத்தால் பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:55 pm

நாமக்கல் மாவட்டத்தில், வீடுகளில் நூலகம் அமைத்தால் பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீடுதோறும் நூலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டங்களில் அரசு புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. வீடுகளில் நூலகங்களை அமைத்துள்ள வாசகா்களைக் கண்டறித்து விருது வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தனிநபா் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் சிறப்பான ஒரு நூலகத்தை தோ்வு செய்து விருது, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் புத்தக திருவிழாவின்போது அவை வழங்கப்படும்.

எனவே, புத்தக ஆா்வலா்கள், நூலகம் அமைத்து பராமரித்து வருவோா், தங்களது நூலகம், பராமரிக்கப்பட்டு வரும் நூல்களின் எண்ணிக்கை, நூல்களின் வகை, அரிய நூல்கள் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட நூலக அலுவலா், மாவட்ட நூலக ஆணைக் குழு, கோட்டை சாலை, உழவா் சந்தை அருகில், நாமக்கல்-637 001 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் வாயிலாக தெரிவிக்கலாம்.

விருதுக்கு இணையதள முகவரியிலோ, நேரில், அஞ்சல் வழி மூலமாக டிச.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 98940-74616 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.