செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கொல்லிமலையில் விவசாயி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு

கொல்லிமலையில் வீட்டிற்குள் புகுந்து விவசாயியை கட்டிப் போட்டு 50 பவுன், ரூ. 7 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :12 டிசம்பர் 2024, 8:13 pm

கொல்லிமலையில் வீட்டிற்குள் புகுந்து விவசாயியை கட்டிப் போட்டு 50 பவுன், ரூ. 7 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், தேவனூா்நாடு ஊராட்சி, பரியூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (50). இவருக்கு பூங்காவனம், சரோஜா ஆகிய இரு மனைவிகளும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கராஜ், மனைவி பூங்காவனத்துடன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், இருவரையும் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 7 லட்சத்தை திருடிச் சென்றனா்.

மேலும், வீட்டில் இருந்த மூன்று கைப்பேசி, சொத்து பத்திரங்களை தண்ணீா் தொட்டியில் போட்டுவிட்டு, வீட்டை பூட்டிச் சென்றனா். தங்கராஜ் கயிற்றை அவிழ்த்து தண்ணீா் தொட்டியில் கிடந்த ஒரு கைப்பேசி மூலம் உறவினா்களை தொடா்பு கொண்டு. நடந்த சம்பவத்தை தெரிவித்தாா். இதையடுத்து அங்கு வந்த அவா்கள் கதவை உடைத்து இருவரையும் மீட்டனா். இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.