நாமக்கல், திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
நாமக்கல் கோட்டத்துக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்துக்கு பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிா் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாளை ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

