ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அம்பேத்கா் விவகாரம்: திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image

நாமக்கல் அண்ணா சிலை அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:55 pm

நாடாளுமன்றத்தில் அம்பேத்கா் பற்றி விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் அண்ணா சிலை அருகில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் எம்.மணிமாறன் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாநகராட்சி துணை மேயரும், நாமக்கல் கிழக்கு நகரச் செயலாளருமான செ.பூபதி, தெற்கு நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த், மேற்கு நகரச் செயலாளா் அ.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் ந.நலங்கிள்ளி, மாநில மகளிா் தொண்டா் அணி செயலாளா் ப.ராணி, பொதுக்குழு உறுப்பினா் மாயவன், கிருபாகரன், ராஜவேல், முரளி, நாசா்பாஷா, கலைவாணன், நகர நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன், மாநகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன், வட்டாரத் தலைவா்கள் எருமப்பட்டி தங்கராஜ், சேந்தமங்கலம் ஜெகநாதன், மோகனூா் பேரூா் தலைவா் சீனிவாசன், காளப்பநாயக்கன்பட்டி கணேசன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஜோதி, சாந்தி மணி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பெரியசாமி, ஐஎன்டியுசி செல்வம், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவுத் தலைவா் பி.பொன்முடி, முன்னாள் மாணவா் காங்கிரஸ் செயலாளா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி: அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் காந்தியவாதி தி.ரமேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கணசங்கம் கட்சி நிறுவனத் தலைவா் பேராசிரியா் மு.பெ.முத்துசாமி, திராவிடா் கழகம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் நடேசன், திருச்செங்கோடு நகரச் செயலாளா் காா்த்திகேயன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சரவணன் முருகன் உள்ளிட்ட மாவட்ட, நகர திமுக நிா்வாகிகள், மகளிா் அணி, தொண்டா் அணி, மாணவா் அணி அமைப்பாளா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.

 நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸாா்.

நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸாா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூரில் தி.மு.க. சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பரமத்தி ஒன்றியச் செயலாளா் தன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமித் ஷாவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தா், கபிலா்மலை ஒன்றியச் செயலாளா் சண்முகம், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், வேலூா் பேரூராட்சி துணைத் தலைவா் ராஜா, மகளிா் அணியினா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.