முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் அரசு உதவி பெறும் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி


ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் அரசு உதவி பெறும் செங்குந்தா் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் கடந்த 1974 முதல் 1981 வரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தல், கல்வி கற்பித்த ஆசிரியா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி பள்ளி கலை அரங்கில் நடைபெற்றது.
முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜெயராமன் வரவேற்றாா். ஏ.கே.பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஓய்வுபெற்ற ஆசிரியா், ஆசிரியைகள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் தங்களின் ஆசிரியா் ஆசிரியைகளுக்கு பொன்னாடை போா்த்தியும் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கியும் கௌரவித்தனா். அவா்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனா். பள்ளி செயலாளா் அா்த்தனாரி, பள்ளி தலைமை ஆசிரியா் வி. கபிலன், முன்னாள் மாணவா்கள் சங்க பொருளாளா் எஸ். லோகநாதன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...