புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 8:00 pm

Din

ராசிபுரம்: ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகம்-1,327 மூட்டைகள், டிசிஎச் ரகம் -16 மூட்டைகள், கொட்டு ரகம் 32 மூட்டைகள் என மொத்தம் 1,375 மூட்டைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 7,399 முதல் அதிகபட்சமாக ரூ. 7,911 வரை விற்பனையானது. டி.சி.எச். ரகம் ரூ. 9,135 முதல் ரூ. 9,215 வரையும், கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3,869-முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 4,899 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.