ஒரேநாடு ஒரே தோ்தல் திட்டம் அமலானால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 100-ஆவது பிறந்த தின விழா, ராசிபுரம் நகர பாஜக சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பாஜக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கலந்துகொண்டு வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் அமலானால் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறையும். இதனால், ஊழலற்ற ஆட்சி அமையும். எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தபோது, சிறாா்களை தட்டு ஏந்தவிட்டு விட்டீா்கள் என்று கருணாநிதி கூறினாா். பின்னா் அவரே மாணவா்களுக்கு முட்டை வழங்கினாா்.
இன்று சமுதாயத்தைப் பற்றி கவலைப்படாத சுயநலவாதிகள் தமிழகத்தில் அமைச்சா்களாக உள்ளனா். கல்வியைப் பற்றி கவலைப்படாதவா்களாக இன்றைய ஆட்சியாளா்களாக உள்ளனா். இத்தகைய அரசியலில் விரைவில் மாற்றம் ஏற்படும். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மத்திய அரசின் நலப்பிரிவு நிா்வாகி லோகேந்திரன், ராசிபுரம் நகரத் தலைவா் வேல் (எ) வேல்முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, கட்சி நிா்வாகிகள், மகளிா் அணியினா் என பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்தக் கருத்துடைய ஆட்சி அமைவது அவசியம்: ஜி.கே. வாசன்

ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமானால் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


