நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கொல்லிமலையில் விபத்தை தவிா்க்க உருளைத் தடுப்பான்கள்

கொல்லிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

கொல்லிமலை மலைப் பாதையில் 50-ஆவது கொண்டை ஊசி வளைவில் பொருத்தப்பட்டுள்ள உருளைத் தடுப்பான்கள்.

Updated On :31 டிசம்பர் 2024, 1:24 am IST

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இயற்கை எழில் சூழ்ந்த இம்மலையின் அழகை ரசிக்க விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், காரவள்ளி அடிவாரப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு செல்லும் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுப்பதற்கான உருளைத் தடுப்பான்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை ரூ. 10 கோடியை ஒதுக்கீடு செய்தது. கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எந்தெந்த இடங்களில் உருளைத் தடுப்பான்களை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அளவீடு செய்து வந்தனா். அந்த வகையில், முதல் கட்டமாக 30 இடங்களில் அவற்றை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், 50, 64-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது. அங்கு வெற்றிக்கரமாக அமைந்திட மீதமுள்ள இடங்களில் அவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உருளைத் தடுப்பான்களானது, மலைப்பாதை வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து மோதினாலும் வாகனங்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.