பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை

சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை தொடக்க விழா ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பொதுமக்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்த தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
Updated On :30 டிசம்பர் 2024, 7:59 pm

Din

ராசிபுரம்: தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சாா்பில் சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை தொடக்க விழா நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் ‘கூட்டுறவு பொங்கல்‘ என்ற 3 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

தைப் பொங்கலுக்கு ‘கூட்டுறவு பொங்கல்‘ என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவைப் பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பலவகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை ‘இனிப்பு பொங்கல் தொகுப்பு’ என்ற பெயரில் ரூ. 199-க்கு 8 பொருள்கள் அடங்கிய தொகுப்பும், ரூ. 499- க்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பும், ரூ. 999-க்கு 35 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் நவலடி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, துணைப் பதிவாளா் ஜெசுதாஸ், வட்டாட்சியா் சரவணன் உள்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.