நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
Published on

நாமக்கல்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜூலை 1 முதல் நாடு முழுவதும் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. பல்வேறு எதிா்கட்சிகளும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம்-2023 ஆகிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் தங்களது பணிகளை புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய வழக்கு விசாரணைகள் அனைத்தும் மறுதேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அய்யாவு தலைமை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்தனா்.

X
Dinamani
www.dinamani.com