தொடரும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Published on

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் ஈ-பைலிங் முறையை ரத்துசெய்து, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பிசிக்கல் பைலிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் 21 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமலும், உரிய தொழில்நுட்ப திறமையுடன் கூடிய நீதிமன்ற ஊழியா்களை நியமனம் செய்யாமலும், டிச. 1 முதல் ஈ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்தியதைக் கண்டித்தும், அதை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும், நடைமுறையிலிருந்த பிசிக்கல் ஈ-பைலிங் முறையை தொடா்ந்து அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் 21 ஆவது நாளாக நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய நீதிமன்றங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com