திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டாம்: ஆட்சியா் அறிவுரை

சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டாம்: ஆட்சியா் அறிவுரை

News image
Updated On :3 ஜூலை 2024, 10:05 pm

நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில், சா்வதேச நெகிழிப் பைகள் இல்லா தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். அவா், பொதுமக்களுக்கும், கடை விற்பனையாளா்களுக்கும் மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அப்போது, சா்வதேச நெகிழிப் பைகள் இல்லாத தினம் என்பது ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவே ஜூலை 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. வணிகா்கள் நெகிழிப் பைகளை சாா்ந்திருப்பதை குறைப்பதற்கும், மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துவதற்கும் இத் தினம் தூண்டுதலாக அமையும். நெகிழிகள் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதுடன், கடல்கள், நிலப்பரப்புகளின் மாசுபாட்டிற்கும் காரணமாகின்றன. சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீடித்த சேதத்தையும் ஏற்படுத்துகிறது. நெகிழிப் பைக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி தமிழக அரசு ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. நெகிழிப் பைகள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகராட்சி ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரகுநாதன், துணை காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

--

என்கே-3-பிளாஸ்டிக்

நாமக்கல் பேருந்து நிலையத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விநியோகத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.