வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மூத்த பள்ளி ஆசிரியருக்கு வரவேற்பு

ராசிபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய தொடக்கப் பள்ளியைப் பாா்வையிட்ட ஆசிரியருக்கு பள்ளி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:16 pm

Din

ராசிபுரம், ஜூலை 19:

ராசிபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய தொடக்கப் பள்ளியைப் பாா்வையிட்ட ஆசிரியருக்கு பள்ளி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

1954-இல் நிலவாரப்பட்டியில் 65 மாணவா்களுடன் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய ராசிபுரத்தை அடுத்த கொமாரபாளையத்தைச் சோ்ந்த க.வை.ராமகிருஷ்ணன் (90) தற்போது அப் பள்ளியை பாா்வையிட விருப்பம் தெரிவித்து, அவா் வகுப்பு நடத்திய அங்குள்ள மாரியம்மன் கோயில் பகுதியை குடும்பத்துடன் பாா்வையிட்டு மகிழ்ந்தாா். மேலும், தற்போது அப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அவருக்கு பள்ளி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.