/

ராசிபுரத்தில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

ராசிபுரம் நகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

News image

திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன்.

Updated On :4 மார்ச் 2024, 6:57 pm

ராசிபுரம்: ராசிபுரம் நகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் பி.வைத்தீஸ்வரன் வரவேற்றாா். ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வனத்துறை அமைச்சருமான மருத்துவா் மா.மதிவேந்தன் கலந்துகொண்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான ராசிபுரம் நகர சாலை வசதி, தினசரி சந்தை அமைத்தல், பட்டா வழங்கல், போதமலை, கெடமலைக்கு சாலை வசதி அமைத்துக் கொடுத்தல், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறினாா். தி.மு.க. தலைமை நிலைய சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட கட்சியின் இலக்கிய அணி இணைச் செயலாளா் ஈரோடு இறைவன் நிதிநிலை அறிக்கை குறித்து பேசினாா். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா், கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே.பாலச்சந்தா், அரசு வழக்குரைஞா்கள் கே.செல்வம், ஆா்.சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.காா்த்திக் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், நகர கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.