பரமத்தி வேலூரில் ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Published on

பரமத்தி வேலூா் பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9 ஆயிரத்து 355 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 84.59 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 76.99-க்கும், சராசரியாக ரூ. 81.69 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 70.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 60.99 க்கும், சராசரியாக ரூ. 66.79 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்து 856-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com